விதை ஆய்வு துணை இயக்குனர் எச்சரிக்கை பொதுமக்கள் வேண்டுகோள் அறுவடை இயந்திரங்கள் அறுவடை செய்த நேரம், வாடகையை குறிப்பிட்டு ரசீது வழங்க வேண்டும்

தஞ்சாவூர், ஜன 21: அறுவடை இயந்திரங்கள், அறுவடை செய்த நேரம் மற்றும் வாடகை தொகையை குறிப்பிட்டு ரசீது வழங்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்ற இயந்திர வாடகை நிர்ணயிக்கும் முத்தரப்பு கூட்டத்தில் காவிரி டெல்டா விவசாயி சங்க தலைவர் ஏ.கே.ஆர் ரவிச்சந்தர் மனு வழங்கினார். அந்த மனுவில் கூறியதாவது: தனியார் அறுவடை இயந்திரம் அறுவடை செய்யும் பணியை இடைநிலையாளர்கள் இல்லாமல் நேரடியாக விவசாயிகள் மற்றும் இயந்திர உரிமையாளர்கள் தொடர்பு கொள்ள வேண்டும். அறுவடை இயந்திரங்கள் அறுவடை செய்த நேரம் மற்றும் வாடகை தொகையை குறிப்பிட்டு ரசீது வழங்க வேண்டும். தற்போது பெல்ட் டைப் இயந்திர வாடகை ரூபாய் 3 ஆயிரத்திற்கு வசூல் செய்யப்படுகிறது. இந்த கூட்டத்தில் நிர்ணயித்த வாடகையை விட, கூடுதல் வாடகை வசூல் செய்யும் இயந்திர உரிமையாளர்களின் ஆர்சி புக்கை ரத்து செய்ய வேண்டும். வெளி மாவட்ட, மாநிலங்களில் இருந்து வரும் தனியார் கதிர் அறுக்கும் இயந்திரங்கள் அந்தந்த வருவாய் கிராம அலுவலரிடம் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: