பாகிஸ்தானுக்கு எதிரான டி20: ஆஸ்திரேலியா அணியில் நட்சத்திர வீரர்கள் ‘அவுட்’

சிட்னி: டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட ஆஸ்திரேலியா அணி பாகிஸ்தானுக்கு செல்ல உள்ளது. இதற்காக மிட்செல் மார்ஷ் தலைமையிலான 17 பேர் கொண்ட ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம்: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சீன் அபோட், சேவியர் பார்ட்லெட், மஹ்லி பியர்ட்மேன், கூப்பர் கோனொலி, பென் டுவார்ஷுயிஸ், ஜாக் எட்வர்ட்ஸ், கேமரூன் கிரீன், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மேத்யூ குஹ்னேமன், மிட்ச் ஓவன், ஜோஷ் பிலிப், மேத்யூ ரென்ஷா, மேத்யூ ஷார்ட், மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் ஆடம் ஜாம்பா. நட்சத்திர வீரர்களான கம்மின்ஸ், மேக்ஸ்வெல், ஜோஷ் ஹேசில்வுட், டிம் டேவிட் மற்றும் நாதன் எல்லிஸ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான அணியில் இடம்பெறுவார்கள் என கூறப்படுகிறது.

Related Stories: