மண் அடுப்புகள் விற்பனைக்கு குவிப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி தொகையை உயர்த்தி வழங்க கோரி தீர்மானம்

ஈரோடு, மார்ச் 12: ஈரோட்டில் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் வாழ்வுரிமை நலச்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று மகளிர் தின விழா கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, சங்கத்தின் தலைவர் ராஜரத்தினம் தலைமை தாங்கினார். இதில், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி தொகையை ரூ.6 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். சுய தொழில் செய்யும் பெண் மாற்றுத்திறனாளிகளுக்கு பிணையில்லாமல் ரூ.1 லட்சம் கடனுதவி வழங்க வேண்டும். வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மாற்றுத்திறனாளிகளுக்கு 35 கிலோ அரிசி ரேஷன் கடைகள் மூலம் வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளி பெண்கள் மீதான வன்முறைகளை தடுத்து, பொது இடங்களில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். அரசு வேலை வாய்ப்புகளில் 4 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் ஆண்டுக்கு 10 ஆயிரம் மாற்றுத்திறனாளகிளுக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் சங்க நிர்வாகிகள், மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: