கோடைக்காலத்தில் ஏற்படும் தீவன பற்றாக்குறையை போக்க சோளத்தட்டு சேகரிப்பு

ஈரோடு, மார்ச் 9: கோடைக்காலத்தில் ஏற்படும் தீவன பற்றாக்குறையை போக்க, ஈரோடு மாவட்டத்திலுள்ள கிராமங்களில் சோளத்தட்டைகளை விவசாயிகள் சேகரித்து வைத்துள்ளனர். பயிர் சாகுபடியில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளின் போது, நிரந்தர வருவாய் அளித்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கறவை மாடுகள் பாதுகாக்கின்றன. இத்தொழிலில் சவாலாக அமைவது, கறவை மாடுகளுக்கு ஆண்டு முழுவதும் தீவனம் கொடுப்பது தான். குறிப்பாக, கோடை காலத்தில் ஏற்படும் வறட்சியின் போது, மேய்ச்சல் நிலங்கள் காய்ந்து, தீவன பற்றாக்குறை ஏற்படும்.

அப்போது, இருப்பு வைக்கப்பட்ட சோள தட்டு, நிலக்கடலை கொடி உள்ளிட்ட உலர் தீவனங்கள் கொடுத்தும், கடையில் வாங்கப்படும் தீவனங்கள் கொடுத்தும் நிலைமையை சமாளிப்பது வழக்கமாகும். தீவனம் முறையாக கொடுக்காவிட்டால், பால் உற்பத்தியும் குறைகிறது. இதனால், வருவாயும் குறைகிறது. இந்நிலையில், நடப்பாண்டு கோடை காலத்தில் தீவன பற்றாக்குறையை எதிர்கொள்ள, ஈரோடு மாவட்ட மலைக்கிராம விவசாயிகள் தீவிரம் காட்டுகின்றனர். குறிப்பாக, ஈரோடு மாவட்டத்திலுள்ள கிராமங்களில் தீவன பற்றாக்குறையை போக்கும் வகையில், சோளத்தட்டையை சேகரித்து மலைபோல் குவித்து வைத்துள்ளனர்.

 

Related Stories: