ஈரோடு மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் மகளிர் தின விழா

 

ஈரோடு, மார்ச் 10: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, ஈரோடு மத்திய மாவட்ட கழகம் சார்பில், மகளிர் தின விழா, பெருந்துறையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.  மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சருமான தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் தலைமையில் வெல்லும் தமிழ் பெண்கள் மற்றும் ஸ்டாலின் படை மகளிர் அணிகளை சேர்ந்த நிர்வாகிகள், பெண்கள் என பலர் கலந்து கொண்டனர். ஒன்றிய செயலாளர்கள் பால் சின்னசாமி, பெரியசாமி, சோளி பிரகாஷ், செல்வராஜ், கனகராஜ், பிரபு, சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ஹேமலதா சம்பத் வரவேற்று பேசினார்.

Related Stories: