பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் பிக்- பாஷ் டி20 தொடரின் கடைசி லீக் போட்டியான 40வது போட்டியில் நேற்று பிரிஸ்பேன் ஹிட், சிட்னி சிக்சர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சிட்னி அணி பவுலிங்கை தேர்வு செய்ய, பிரிஸ்பேன் அணியின் ஓப்பனராக இறங்கிய வில்டர்முத் 1 ரன்னிலும், கேப்டன் கவாஜா 11 ரன்னிலும், அடுத்து வந்த மேத்யூ ரென்ஷா டக் அவுட் ஆகியும் அதிர்ச்சியளித்தனர். அடுத்து வந்த நாதன் மெக்ஸ்வினி அதிரடியாக விளையாடி 69 ரன்கள் எடுத்து அவுட் ஆகினார். தொடர்ந்து இறங்கிய லபுசேன் 18 ரன், பிரியன்ட் 14 ரன் என தங்களது பங்கிற்கு அடிக்க கடைசியாக இறங்கிய நேசர் அதிரடியாக விளையாடி 35 ரன் எடுத்து அவுட் ஆக பிரிஸ்பேன் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது.
சிட்னி அணி தரப்பில் ஸ்டார்க் 4 விக்கெட் எடுத்தார். அடுத்து இறங்கிய சிட்னி அணி ஓப்பனர் பாபர் அசாம் 1 ரன்னில் அவுட் ஆக அடுத்து இறங்கிய பிலிப்பும் 8 ரன்னிலும் அவுட் ஆனார். பொறுப்பாக ஆடி வந்த மற்றொரு ஓப்பனர் ஸ்டீவ் ஸ்மித் 54 ரன், ேகப்டன் ஹென்ட்ரிக்ஸ் 24 ரன்னில் வெளியேறினர். அடுத்து இறங்கிய சாம் கரன் அதிரடியாக விளையாடி 53 ரன் எடுத்து அவுட் ஆகாமல் இருக்க சிட்னி அணி 18.4 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சிட்னி சிக்சர்ஸ் குவாலிபயருக்கு தகுதி பெற்ற நிலையில் பிரிஸ்பேட் ஹிட் கடைசி அணியாக எலிமினேட் ஆகி வெளியேறியது.
