கரூர், ஜன. 14: கரூர் வெண்ணைமலை கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழர் பண்பாட்டுத் திருவிழாவான பொங்கல் விழா நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் கொங்கு நடந்த பொங்கல் விழாவில் கல்வி அறக்கட்டளை தலைவர் அட்லஸ் நாச்சிமுத்து தலைமை வகித்தார். இதில் மாணவ மாணவிகள் தமிழர் கலை. மரபு, மாண்புகளைபின்பற்றி ஒயிலாட்டம் மற்றும் சிலம்பாட்ட நடனங்களுடன் சிறப்பு விருந்தினரை வரவேற்றனர். பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கிராமிய பாரம்பரிய முறைப்படி பொங்கலிட்டு வழிபட்டனர்.
அறக்கட்டளைசெயலாளர் விசா.சண்முகம், பொருளாளர் வீரப்பன், துணைத் தலைவர் மனோகரன, இணைச் செயலாளர்சேதுபதி முன்னிலை வகுத்து பொங்கலின் சிறப்பு பற்றி எடுத்துக் கூறினர்.தொடர்ந்து கலை மற்றும் விளையாட்டுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தலைவர் அட்லஸ் நாச்சிமுத்து பரிசு வழங்கினார். முதல்வர் பூமிநாதன் மற்றம் துணைமுதல்வர் வழிகாட்டுதலின்படி பேராசிரியர்கள் பொங்கல் விழா ஏற்பாட்டினைச் சிறப்பாக செய்திருந்தனர்.
