பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து குடியரசு தினவிழாவுக்கு சைக்கிளில் வந்த மனோதங்கராஜ் எம்எல்ஏ

தக்கலை, ஜன. 27: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மனோ தங்கராஜ் எம்எல்ஏ 17.4 கி.மீ தூரம் சைக்கிளில் பயணம் ெசய்து பரபரப்பை ஏற்படுத்தினார். நாடு முழுவதும் நேற்று குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் நாகர்கோவில் அண்ணா ஸ்டேடியத்தில் குடியரசு தின விழா நடந்தது. இதில் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். பத்மனாபபுரம் தொகுதி எம்எல்ஏயும், குமரி மேற்கு மாவட்ட திமுக செயலாளருமான மனோ தங்கராஜ் நேற்று நாகர்கோவிலில் நடந்த குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள தக்கலையில் இருந்து கட்சி நிர்வாகிகளுடன் சைக்கிளில் புறப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். தக்கலை பழைய பஸ் நிலையத்தில் இருந்து மனோ தங்கராஜ் எம்எல்ஏ திமுக நிர்வாகிகள் 5 பேருடன் நாகர்கோவிலுக்கு சைக்கிளில் புறப்பட்டு சென்றார்.

முன்னதாக அவர் தக்கலையில் நிருபர்களிடம் கூறுகையில், ‘கடந்த 2008ம் ஆண்டு உலக சந்தையில் ஒரு ேபரல் கச்சா எண்ெணய் 150 டாலருக்கு விற்றது. ஆனால் அப்போது ஒரு லிட்டர் பெட்ரோல் ₹52க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது ஒரு பேரல் கச்சா எண்ணெய் 50 டாலருக்கும் கீழாக குறைந்து விட்டது. ஆனால் ஒரு லிட்டர் ெபட்ரோல் ₹90க்கும் மேலாக விற்பனை ெசய்யப்படுகிறது’. ‘பெட்ரோல், டீசல் கடும் விலை உயர்வால் சமானிய மக்களால் வாகனங்களில் செல்ல முடியவில்லை. மேலும் பல்வேறு அத்தியாவசிய பொருட்களும் விலை உயர்ந்து விட்டன. இதனால் நாகர்கோவிலில் நடக்கும் குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள சைக்கிளில் செல்கிறோம். மேலும் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு ெதரிவித்தும் இந்த ைசக்கிள் பயணத்தை ேமற்ெகாண்aடுள்ளோம்’ என்றார்.இதில் பத்மநாபபுரம் நகர செயலாளர் மணி, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் வர்க்கீஸ், தக்கலை மண்டல பொறுப்பாளர் ஜெகதேவ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: