வாகனத்தில் அடிபட்டு இறந்த குரங்கு சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு வழங்க கோரிக்கை

குன்னூர், ஜன.27: குன்னூர் அருகே சிம்ஸ் பார்க் செல்லும் சாலையில்  வாகனத்தில் அடிபட்டு குரங்கு இறந்தது. நீலகிரி மாவட்டம் 65 சதவீதம்  காடுகளை கொண்டுள்ளதால்  இங்கு பல்வேறு  வகையான வன விலங்குகள் உள்ளன. குறிப்பாக  குரங்குகள் அதிகளவில் உள்ளன. குன்னூர்  மேட்டுப்பாளையம்  மலைப்பாதையில்  சாலையில்  செல்லக்கூடிய  சுற்றுலா பயணிகள்  குரங்குகளுக்கு உணவளிப்பதால் அவை சாலையிலே அமர்ந்து விடுகின்றன. இதனால் அவ்வப்போது சாலையில் செல்லும்  வாகனங்களில் அடிபட்டு இறந்துவிடுகின்றன. இதனை தடுக்க வனத்துறையினர் சார்பில் பல்வேறு  விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டும் எவ்வித பயனும் இல்லை. சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி  நீலகிரியில் உள்ள பொதுமக்களும் தொடர்ந்து குரங்குகளுக்கு உணவளித்து வருகின்றனர்.

இந்நிலையில் குன்னூரில் இருந்து சிம்ஸ் பார்க் செல்லும் சாலையில் வாகனத்தில் அடிபட்டு குரங்கு ஒன்று இறந்து கிடந்தது. இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.  வனத்துறையினர் அங்கு சென்று குரங்கினை அப்புறப்படுத்தினர். பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள்  சாலையில் உணவளிப்பதை தவிர்க்க வேண்டும். சாலையில் வாகனங்களை கவனத்துடன் இயக்க வேண்டும் என வன உயிர் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>