கொரோனா தொற்று காரணமாக சேலம் மாவட்டத்தில் கிராமசபை கூட்டம் ரத்து

சேலம், ஜன.26: கொரோனா ெதாற்று காரணமாக சேலம் மாவட்டத்தில் இன்று (26ம் தேதி) குடியரசு தினத்தன்று நடைபெறவிருந்த கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் ராமன் தெரிவித்துள்ளார். இது குறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக அரசின் அரசாணைப்படி, அனைத்து கிராம ஊராட்சிகளில் இன்று (26ம் தேதி) நடைபெறவிருந்த கிராம சபை கூட்டம், கொரோனா வைரஸ் காய்ச்சல் தொற்று, பேரிடர் கால தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக, ரத்து செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

Related Stories:

>