அரியானூர் பாலத்தில் எரியாத மின் விளக்குகள்; சீரமைக்க வலியுறுத்தல்

ஆட்டையாம்பட்டி, ஜன.26: சேலத்தில் இருந்து கோவை செல்லும் பைபாஸ் சாலையில் அரியானூர் பிரிவு சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படுவதை தடுக்கும் வகையில், ₹45 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட பாலம், கடந்த 8ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். ஜனவரி 9ம் தேதி முதல் இந்த பாலத்தில் அனைத்து வாகனங்களும் சென்று வருகிறது. இந்நிலையில் பாலம் திறப்பு விழாவை முன்னிட்டு 3 நாட்கள் மட்டுமே, ஜெனரேட்டர் வசதியுடன் பாலத்தில் அனைத்து விளக்குகளும் எரிந்தன. அதன்பின் கடந்த 15 நாட்களாக பாலத்தில் உள்ள மின் விளக்குகள் எரியவில்லை. நேற்று முன்தினம் இரவு, தமிழக முதல்வர் இந்த பாலத்தை கடந்து சென்ற போது, மீண்டும் ஜெனரேட்டர் வசதியுடன் மின் விளக்குகள் அனைத்தும் எரிந்தது. நேற்று இரவு முதல் மீண்டும் மின் விளக்குகள் எரியாமல் உள்ளது. இதனால் பாலத்தை கடக்கும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் ேவண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories:

>