அயோத்தியாப்பட்டணத்தில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்

அயோத்தியாபட்டணம், ஜன.26: அயோத்தியாபட்டணம் ஒன்றியம், பேரூர் திமுக சார்பில், ஒன்றிய பொறுப்பாளர் விஜயகுமார் தலைமையில், மொழிபோர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. தஞ்சை கலைமணி பாரதி, விஷார் தமிழரசன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் புவனேஸ்வரி செந்தில்குமார் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினார். பேரூர் பொறுப்பாளர் பாபு (எ)செல்வராஜ் வரவேற்றார். இதில் நிர்வாகிகள் மனோசூரியன், ஹரி, சங்கர், சரவணன், குமார், ராயப்பன்,  வெங்கட்ராசு, தீனதயாளன், ஆறுமுகம், ராஜேந்திரன், முத்து, சீனிவாசன், கந்தசாமி, செந்தில், ஆறுமுகம், பாலியா கவுண்டர், சிந்தாமணி கஜேந்திரன், கஜேந்திரன், பாரதி ஜெயக்குமார், ப்ரீத்தி மோகன், ஹேமலதா விஜயகுமார், உஷா ராஜகோபால், கோபால், நாகராஜ், கலாப்பிரியா பழனிசாமி, மேகலா தேவேந்திரன், சுப்பிரமணி, சுமதி குப்புசாமி, ராணி சேகர், சின்னதாயி பொன்னுசாமி, நடராஜன், பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>