சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா நேற்று வெளியிட்ட அறிக்கை: இந்திய பொருட்களுக்கான இறக்குமதி வரியை 500 சதவிகிதம் உயர்த்தி அறிவித்திட அமெரிக்க பாராளுமன்றத்தில் இரு தனிநபர் மசோதாவான கிராஹாம்பெல் புளு மெந்தால் சட்ட முன்வடிவை முழுமையாக ஆதரிக்கும் நடவடிக்கையை எடுத்து வருவதாக செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
இது இந்தியாவை அடிமைப்படுத்திட முனைவதாகவே வெளிப்படையாக அதிபர் டிரம்பின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. அமெரிக்க அதிபரின் ஏகாதிபத்திய 500 சதவிகித வரிவிதிப்புக்கு கடும் கண்டனங்களை பதிவு செய்வதுடன், தேசத்தின் பொருளாதாரத்தை பாதுகாக்க இந்திய வணிகர்கள் தேசத்திற்கு தோளோடு தோள் கொடுப்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
