மது அருந்தியதாக 2 பேர் மீது வழக்குப்பதிவு

கடவூர், ஜன.10: தரகம்பட்டியில் பொது இடங்களில் மது அருந்தியதாக 2 பேர் மீது போலிசார் வழக்குப்பதிவு செய்தனர். சிந்தமாணிபட்டி போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தரகம்பட்டி அரசு மதுபானக்கடை அருகே பொது இடத்தில் தரகம்பட்டி அருகே வையாளிமடையை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (22). காணியாளம்பட்டி மேற்கு தெரு அண்ணாத்துரை மகன் பாரதிகண்ணன் (26). ஆகிய இருவரும் மதுபானங்களை அருந்தி உள்ளனார். சிந்தமாணிபட்டி போலீசார் ஹரிகிருஷ்ணன் மற்றும் பாரதிகண்ண ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

 

 

Related Stories: