குளித்தலை, ஜன. 10: கரூர் மாவட்டம் குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலைக் கல்லூரி விலங்கியல் துறையைச் சார்ந்த இரண்டாம் ஆண்டு மாணவர்கள் கிருஷ்ணவேணி, ரம்யா, கீர்த்தனா, ரங்கராஜ், யுவராஜா ஆகியோர் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தொடர்பாக மாநில அளவில் நடைபெற்ற விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி போட்டிகளில் மவுன நாடகப் பிரிவில் மூன்றாம் பரிசை பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர் த .சுஜாதா, விலங்கியல் துறை தலைவர் பாபுநாத் மின்னணுவியல் துறை தலைவர் அன்பரசு, உடற்கல்வி இயக்குனர் பேராசிரியர் வைரமூர்த்தி, தாவரவியல் துறை தலைவர் வேணுகோபால் மற்றும் விலங்கியல் துறை பேராசிரியர்கள் மகேஸ்வரி, தேவி தனலட்சுமி, பேராசிரியர்கள் மாணவ மாணவியர்கள் வெற்றிபெற்ற மாணவர்களை பாராட்டினர்.
