தமிழக நீதிக் கட்சி பொதுக்குழு செயற்குழு கூட்டம்

கரூர், ஜன. 10: தமிழக நீதிக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் வக்கீல் பாஸ்கரன் ஒரு செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பது. தமிழக நீதி கட்சியின் பொதுக்குழு செயற்குழு கூட்டம் நாளை காலை 10 மணிக்கு கரூர் ஈரோடு, ரோடு ஆத்தூர் பிரிவில் உள்ள கந்தன் மஹாலில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் 2026 தேர்தல் நிலைப்பாடு குறித்தும், கட்சியின் கட்டமைப்பு குறித்தும் முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது.

மாநிலத் தலைவர் ஜெகன், தலைமை தாங்குகிறார். சிறப்பு அழைப்பாளராக மக்கள் சேவகர் வாழவந்தியார் சரவணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். அந்த நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கட்சியின் மாநில பொதுச் செயலாளர் வக்கீல் பாஸ்கரன் தெரிவித்துள்ளார். குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கல்லூரி மாணவர்கள்

 

Related Stories: