ரூ.25.45 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்

பரமத்திவேலூர், ஜன.10: பரமத்திவேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான சோழசிராமணி, ஜேடர்பாளையம், அய்யம்பாளையம், பிலிக்கல்பாளையம், அண்ணா நகர், பாண்டமங்கலம், கபிலர்மலை, இருக்கூர், பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் கொப்பரையை பொத்தனூர் மின்னணு தேசிய வேளாண்மை சந்தைக்கு கொண்டு வருகின்றனர். இங்கு தரத்திற்கு தகுந்தார் போல் மறைமுக ஏலம் விடப்படுகிறது. நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 15 ஆயிரத்து 990 கிலோ கொப்பரை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ.196.99-க்கும், குறைந்த பட்சமாக கிலோ ரூ.168.20- க்கும், சராசரியாக கிலோ ரூ.190.90க்கும் ஏலம் போனது. 2ம் தரம் கொப்பரை ரூ.159.01- க்கும், குறைந்த பட்சம் ரூ.120.30க்கும், சராசரியாக கிலோ ரூ.154.15க்கு ஏலம் போனது. மொத்தம் ரூ.25.45 லட்சத்திற்கு ஏலம் போனது. கொப்பரை விலை உயர்ந்துள்ளதால் தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Related Stories: