ஈரோடு, ஜன. 9: ஈரோடு மாவட்டம், பர்கூர் போலீசார் நேற்று முன்தினம் அவர்களது காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, துருசனம்பாளையம் மோரி அருகில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், பொது இடத்தில் மது அருந்திய நபரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் பர்கூர், கீழ்த்தெரு பகுதியைச் சேர்ந்த குருநாதன் (55) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
