நீடாமங்கலத்தில் 5345 பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு

நீடாமங்கலம், ஜன. 9: நீடாமங்கலம் தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தின் மூலம் 5,345 பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நீடாமங்கலம் சர்வமாணிய அக்ரகாரம் நியாய விலை கடையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நீடாமங்கலம் பேரூராட்சி தலைவர் ராமராஜ் தலைமை வகித்தார். கூட்டுறவு சார் பதிவாளர் ரேவதி மற்றும் வட்ட வழங்கல் அலுவலர் ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் சோம.செந்தமிழ்ச்செல்வன் பரிசு தொகை, கரும்பு மற்றும் பொருட்கள், வேட்டி, சேலை வழங்கி திட்டத்தை துவங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் கமாலுதீன், பேரூராட்சி துணை தலைவர் ஆனந்தமேரி ராபர்ட் பிரைஸ், மாவட்ட ஊராட்சி முன்னாள் உறுப்பினர் ராணி சேகர், வர்த்தக சங்க தலைவர் ராஜாராமன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் அய்யாபிள்ளை,

மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் சீனு.ராஜா, இளைஞரணி அமைப்பாளர் காந்தி மணி, வார்டு உறுப்பினர்கள், கூட்டுறவுத் துறை அலுவலர்கள் தண்டாயுதபாணி, குருமூர்த்தி, விக்னேஷ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். மேலும் சித்தமல்லி, பரப்பனாமேடு நியாயவிலை கடைகளிலும் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியிலும் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் சோம.செந்தமிழ்ச்செல்வன் பங்கேற்று துவங்கி வைத்தார்.

 

Related Stories: