மீண்டும் திராவிட மாடல் 2.0 அமையும்; திமுக கூட்டணிக்கு வாக்களிக்க மக்கள் தயாராகி விட்டனர்: அமைச்சர் கீதாஜீவன் உறுதி

 

தூத்துக்குடி: திமுக கூட்டணிக்கு வாக்களிக்க தமிழக மக்கள் தயாராகி விட்டனர். மீண்டும் திராவிட மாடல் ஆட்சி 2.0 அமையும் என்று தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.
தூத்துக்குடி டூவிபுரத்தில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் 5 ஆண்டுகாலமாக மாதம் மும்மாரி பொழிந்து கொண்டிருக்கிறது. தமிழகம் வளர்ச்சியடைந்து உள்ளது. எல்லா வகையிலும் வாழ்வாதாரம் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. திராவிட மாடல் ஆட்சியில் மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

தமிழகத்தில் மீண்டும் திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையும் என்பதில் சந்தேகமில்லை. மக்கள் திமுக கூட்டணிக்கு வாக்களிக்க தயாராகி விட்டனர். மக்கள் தொகை அடிப்படையில் ஒதுக்கக் கூடிய கல்வி நிதி, 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் நிதியை தராமல் ஒன்றிய அரசு தமிழக மக்களை வஞ்சித்து வருகிறது என்றார்.

Related Stories: