கள்ளக்குறிச்சியில் ரூ. 2,325 கோடி முதலீட்டில் புதிய காலணி தயாரிப்பு ஆலையின் 2ம் கட்ட பணிகள் தொடக்கம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரூ. 2,325 கோடி முதலீட்டில் புதிய காலணி தயாரிப்பு ஆலையின் 2ம் கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 27,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் மிகப்பெரிய காலணி உற்பத்தியாளர்களில் ஒன்றான தைவானைச் சேர்ந்த பௌசென் குழுமம், இந்தியாவிற்காக காலணிகளை உற்பத்தி செய்வதற்காக கள்ளக்குறிச்சியில் உற்பத்தி ஆலையை அமைக்க தொடங்கி உள்ளது. சாத்தனூர் சிப்காட்டில் ரூ.2,325 கோடி முதலீட்டில் தைவான் ஆலையின் இரண்டாம் கட்டத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் 27,000 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகும். இது தமிழ்நாட்டின் காலணி உற்பத்தி துறைக்கு மற்றொரு மைல்கள் ஆகும். காலணி மற்றும் உற்பத்தி, சுற்றுசூழல் அமைப்பில் முன்னணியில் இருக்கும் தமிழ்நாடு, உலகளாவிய நிறுவனங்கள், மேம்பட்ட உற்பத்தி திறன்கள், பெரிய அளவிலான வேலை வாய்ப்புகளை தொடர்ந்து ஈர்த்து வருகிறது. வலுவான உட்கட்டமைப்பு, திறமையான மனித வளம் மற்றும், முன்னெச்சரிக்கை கொள்கைகளால் தொழிற்துறை முதலீடுகளுக்கு விருப்பமான இடமாக தமிழ்நாட்டின் நற்பெயரை மேலும் வலுப்படுத்துகிறது.

Related Stories: