வாக்குகளை பெற கொள்கை தேவை விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறாது: குஷ்பு ‘நச்’

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் பாஜ துணை தலைவர் நடிகை குஷ்பு நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழ்நாட்டிற்கு அமித்ஷா வந்தது நிச்சயம் பலனளிக்கும். தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஸ்டார் விஜய். 92-93ல் ரஜினி எப்படி இருந்தாரோ, அதேபோல் தற்பொழுது மிகப்பெரிய ஸ்டாராக விஜய் தான் இருக்கிறார். விஜய்யை பார்க்க கூட்டம் வரத்தான் செய்யும். ஆனால் அந்த கூட்டம் வாக்காக மாறுமா என இதற்கு முன்பு பல தேர்தல்களை நாம் பார்த்துள்ளோம். நடிகரை பார்க்க கூட்டம் வரும். அது ஓட்டாக மாறுமா என்பதை சொல்ல முடியாது. இளைஞர்கள், பெண்கள் என அனைத்து தரப்பு வாக்குகளையும் பெற கொள்கை தான் தேவை. அந்த கொள்கையை பிரதமர் மோடி கொண்டு வருகிறார். தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்னும் பிற கட்சிகள் சேர வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: