- அமைச்சர்
- ரகுபதி
- திருப்பரங்குன்றம்
- சென்னை
- மதுரை
- உயர் நீதிமன்றம்
- தீபத்தூண்
- தமிழ்நாடு அரசு
- உச்ச நீதிமன்றம்
- சட்டத்துறை
சென்னை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நேற்று உத்தரவிட்டது. இதையடுத்து, உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: திருப்பரங்குன்றம் வழக்கில் மேல்முறையீடு செய்யப்படும். ஒருவரின் கோரிக்கைக்காக இல்லாத வழக்கத்தை நடைமுறைப்படுத்த முடியாது. தீபத்தூணில் தீபம் ஏற்றும் உத்தரவு சட்டத்திற்கு முரண்பாடான செயலாகும். தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்றால் அதற்கான ஆதாரங்களை கண்டறிந்து நீதிபதிகள் தீர்ப்பளிக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய எங்களுக்கு உரிமை உள்ளது. வழக்கத்தில் இல்லாத ஒன்றை ஏன் நீதிமன்றம் புகுத்த வேண்டும் என்பதுதான் மக்களின் கேள்வி. 144 தடை உத்தரவு விதிக்கப்படவில்லை என்றால், அன்றே தீபம் ஏற்றும் சூழல் ஏற்பட்டிருக்கும். உச்ச நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பை பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
