மதுரை : திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டது செல்லும் என்று ஐகோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற தனி நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். நீதிபதி சுவாமிநாதன் உத்தரவை ரத்து செய்ய கோரி கோயில் நிர்வாகம், அறநிலையத்துறை, வக்பு வாரியம், தர்கா நிர்வாகம் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் இன்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் இன்று தீர்ப்பு அளித்தனர்.அதில், “கோயிலுக்கு சொந்தமான இடத்தில் தீபம் ஏற்றுவதால் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பது அர்த்தமற்றது. தீபத்தூண் கோயிலுக்கு சொந்தமான இடத்தில்தான் உள்ளது. ஆகவே மாவட்ட ஆட்சியர் மேற்பார்வையில் தீபம் ஏற்றலாம், “என்று தெரிவித்து மேல்முறையீட்டு மனுக்களை முடித்துவைத்தது.
