சென்னை: சென்னை காமராஜர் சாலையில், அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அவ்வழியே சென்ற 2 பைக்-கள், 1 கார் சேதம் அடைந்துள்ளது. விபத்தில் பெண் ஒருவர் படுகாயம் அடைந்தார். விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர், அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. சாலையில் தலை குப்புற கவிழ்ந்துகிடக்கும் காரை போலீசார் அப்புறப்படுத்தினர்.
