சென்னை: பொங்கல் பரிசுத்தொகை, தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (ஜன.8) தொடங்கி வைக்கிறார். அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் ரூ.3,000 பரிசுத்தொகையுடன் பொங்கல் தொகுப்பு வழங்கப்படவுள்ளது. பொங்கல் பரிசுத்தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு ஒன்று வழங்கப்படவுள்ளது. 2.22 கோடி அரிசி அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்போருக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது. பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் பரிசுத்தொகைக்கு சேர்த்து ரூ. 6.936 கோடி தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.
