எஸ்ஐஆர் பணிக்கு எதிராக வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நானே ஆஜராகி வாதாடுவேன்: மம்தா பானர்ஜி அறிவிப்பு

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம், தெற்கு 24பர்கனாஸ் மாவட்டத்தில் உள்ள சாகர் தீவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, ‘‘2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக வாக்காளர்களின் வாக்குரிமையை பறிப்பதற்காக தொழில்நுட்பம் ஆயுதமாக பயன்படுத்தப்படுகின்றது. ஜனநாயக பாதுகாப்புக்களை பலவீனப்படுத்தும் வகையில் செயற்கை நுண்ணறிவு மற்றும் முறைசாரா டிஜிட்டல் தளங்களை பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் தன்னிச்சையாக நீக்கப்படுகின்றது.

வாக்காளர் பட்டியல் திருத்தம் காரணமாக இத்தனை பேர் உயிரிழந்ததற்கு எதிராக நாங்கள் நாளை(இன்று) நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போகிறோம். வழக்கறிஞராக அல்லாமல் ஒரு சாதாரண குடிமகனாக உச்சநீதிமன்றத்தில் ஆஜராக அனுமதி கோர இருக்கிறேன். தேவைப்பட்டால் உச்சநீதிமன்றத்துக்கு சென்று மக்களுக்காக வாதாடுவேன்” என்றார். முதல்வர் மம்தா பானர்ஜி, இந்த மனுவை திரிணாமுல் கட்சியின் சார்பாக தாக்கல் செய்கிறாரா, மாநில அரசு சார்பில் தாக்கல் செய்ய போகிறாரா என்பது குறித்து எதுவும் கூறவில்லை.

Related Stories: