தா.பழூர், ஜன.5: தா.பழூர் திமுக கிழக்கு ஒன்றிய அலுவலகத்தில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி கூட்டம் நடைபெற்றது.அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, தா.பழூர் கிழக்கு ஒன்றியம், தா.பழூர் ஊராட்சியில், புதிய வாக்குச்சாவடி எண் 313,314,316ல் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ முன்னெடுப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட பார்வையாளர் முருகேசன் முன்னிலை வகித்தார்.
இதில் அரியலூர் தொகுதி பார்வையாளர் அன்பரசன், ஒன்றிய கழக செயலாளர், ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய துணை செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் கார்த்திகைகுமரன் மற்றும் கிளை கழக செயலாளர்கள், கிளை நிர்வாகிகள், வாக்குச்சாவடி முகவர்கள் (BLA-2), வாக்குச்சாவடி டிஜிட்டல் முகவர்கள் (BDA), வாக்குச்சாவடி பணிக்குழு உறுப்பினர்கள் (BLC) ஆகியோர் கலந்து கொண்டனர்.
