கூடலூர், டிச.31: கூடலூர் மெயின் பஜார் பழைய பேருந்து நிலையம் அருகே நேற்று முன்தினம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தினை உடைத்து, மர்ம நபர் ஒருவர் பணத்தை திருடிச் சென்றார். இது குறித்து கூடலூர் வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தினர்.
அதில் கூடலூர் முனியாண்டி கோவில் தெருவை சேர்ந்த செண்பகராஜா (36) என்பவர் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. மேலும் தற்போது அவர் ஆண்டிபட்டியில் குடியிருந்து வருவதும் தெரிய வந்தது. இதனையடுத்து ஆண்டிபட்டியில் பதுங்கி இருந்த அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
