புதிய தென் மண்டல ஐஜி நியமனம்

மதுரை, டிச. 31: புதிய தென் மண்டல ஐஜியாக விஜேந்திர பிதாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தென் மண்டல ஐஜியாக இருப்பவர் பிரேம் ஆனந்த் சின்கா. இவர் பதவி உயர்வு பெற்று ஆவடி ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். அதே போல், இவருக்கு பதிலாக சென்னையில் கூடுதல் கமிஷனராக இருக்கும் விஜேந்திர பிதாரி புதிய தென்மண்டல ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மதுரையில் வடக்கு துணை கமிஷனராக இருக்கும் அனிதா பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக விருதுநகர் மாவட்டத்தில் ஏஎஸ்பி யாக பணியாற்றும் மதிவாணன், பதவி உயர்வு பெற்று மதுரை வடக்கு போலீஸ் துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

Related Stories: