நத்தம், டிச. 31: நத்தம் அருகே ஆவிச்சிபட்டி பாண்டியன் நகர் பகுதியில் சின்னழகு என்பவருக்கு சொந்தமான புளியந்தோப்பு உள்ளது. இந்த தோப்பில் நேற்று முன்தினம் இரவு மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றுள்ளது. இதனை கண்டு அச்சமடைந்த அப்பகுதி மக்கள், இதுகுறித்து உடனே நத்தம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதன்பேரில் நிலைய உதவி அலுவலர் அம்சராஜன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த புதரில் பதுங்கியிருந்த சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை உயிருடன் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் கரந்தமலையில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் மலைப்பாம்பு பத்திரமாக விடுவிக்கப்பட்டது.
