திருவாரூர், டிச. 31: அரசு ஊழியர்களாக அறிவிக்கக்கோரி அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் நன்னிலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக அறிவித்திடவேண்டும். பணி ஓய்வு பெறும்போது ஊழியர்களுக்கு பணிக்கொடையாக ரூ.10 லட்சமும், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சமும் வழங்கவேண்டும்,
குடும்ப ஓய்வூதியமாக மாதம் ரூ.9 ஆயிரம் வழங்கவேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் நன்னிலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். சங்கத்தின் ஒன்றிய செயலாளர் வசந்தா தலைமை வகித்தார். இதில் மாவட்ட தலைவர் திரிபுரசுந்தரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
