பட்டா வழங்கக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் காத்திருப்பு போராட்டம்

திருத்துறைப்பூண்டி, டிச. 31: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகர இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருத்துறைப்பூண்டி நகராட்சி 20 வார்டு பூண்டு வெளி கிராமத்தில் 100 காலத்திற்கு மேலாக வீடு கட்டி வசித்து வரும் ஏழை எளிய மக்களுக்கு உடன் பட்ட வழங்க கோரி காத்திருப்பு போராட்டம் தாலுக்கா அலுவலகம் முன்பு நடைபெற்றது, நகர விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் வாசுதேவன் தலைமை வகித்தார்,

கவுன்சிலர் லட்சுமி, 21 வார்டு செயலாளர் அய்யப்பன், பூண்டு வெளி கிராம தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வைத்தனர், இதில் எம்எல்ஏ மாரிமுத்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சந்திரராமன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ராஜா, மாவட்டக்குழு உறுப்பினர்கள் முத்துக்குமரன், சுந்தர் நகர செயலாளர் கார்த்திக், விவசாய சங்க நகர செயலாளர் ராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

Related Stories: