பேராவூரணி, டிச.31: பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட இடையாத்தி அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அருள் தலைமை வகித்தார். எம்எல்ஏ அசோக்குமார் குத்து விளக்கேற்றி மருத்துவ முகாமை துவக்கி வைத்து பேசினார்.
இந்த முகாமில் பெண்கள், குழந்தைகள், இருதயநோய், பல், கண், பொது மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களை பரிசோதனை செய்து மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர். மேலும், இசிஜி, எக்கோ, ஸ்கேன், ரத்தப்பரிசோதனை, எக்ஸ்ரே, சளி, ரத்தப்பரிசோதனை செய்யப்பட்டது.
முகாமில் 442 ஆண்கள், 584 பெண்கள், 28 குழந்தைகள் என 1054 பேர் கலந்து கொண்டனர். இவர்களில் 8 பேர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். முகாமில் திமுக பேராவூரணி வடக்கு ஒன்றியச் செயலாளர் பன்னீர்செல்வம், மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் சவுந்தர்ராஜன் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
