விபத்தில் இறந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு ரூ.11 லட்சம் மதிப்பில் காசோலை

தஞ்சாவூர், டிச.31: முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து விபத்தில் இறந்தவர்களின் வாரிசுதாரர்களிடம் ரூ.11 லட்சம் மதிப்பிலான காசோலையை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் நேற்று வழங்கினார். தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் தெற்கு கிராமத்தை சேர்ந்த உஷா என்பவரின் கணவர் அறிவழகன் மற்றும் மகள் பவ்யாஸ்ரீ ஆகிய இருவரும் கடந்த 13.8.2025 அன்று சாலை விபத்தில் உயிரிழந்தமைக்காகவும், மேலும் உஷா மற்றும் மகள் ரூபா காயமடைந்தற்காகவும் தமிழக முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.8,00,000-க்கான காசோலை வழங்கப்பட்டது.

மேலும், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் தெப்பக்குளம் வடகரை காட்டுநாயக்கன்காலனி என்ற முகவரியை சேர்ந்த அனிதா மகள் தேஜாஸ்ரீ கடந்த 13.8.2025 அன்று சாலை விபத்தில் உயிரிழந்தமைக்காக தமிழக முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3,00,000 க்கான காசோலை என மொத்தம் ரூ.11 லட்சம் மதிப்பிலான காசோலைகளை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், கோட்டாட்சியர் நித்யா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

Related Stories: