தேர்தல் நெருங்குகிறது வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்புடன் பணியாற்றிட வேண்டும்

பொன்னமராவதி,டிச.31: பொன்னமராவதி அருகே நல்லூரில் என் வக்குச்சாவடி வெற்றி சாவடி என்ற திமுக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள நல்லூரில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி தமிழ்நாடு தலைகுனியாது என்ற பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நடைபெற்றது.

பொன்னமராவதி வடக்கு ஒன்றியச்செயலாளர் முத்து திமுக வின் அனைத்து நிர்வாகிகளும் தீவரமாக தேர்தல் பணியாற்ற வேண்டும். வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்புடன் பணியாற்றிட வேண்டும் என ஆலோசனை வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து நிர்வாகிகளுக்கு தமிழ்நாடு தலைகுனியாது என் வாக்குச்சவாடி வெற்றி வாக்குச்சாவடி என்ற வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கரினை செல்போன் மற்றும் பாக்கெட்டில் அணிவித்தார். இதில் முன்னாள் மாவட்டக்கவுன்சிலர் மணிகண்டன், மற்றும் நல்லூர் ஊராட்சி நிர்வாகிகள், திமுக வாக்குச்சாவடி முகவர்கள், மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Related Stories: