மயிலாடுதுறை, டிச. 31:மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலகர்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. உண்ணாவிரதத்திற்கு மாவட்ட தலைவர் ஜெயராமன் தலைமை வகித்தார்.
இந்த உண்ணாவிரதத்தில் ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கு விபிஜி ராம்ஜி என பெயர் வைத்து, மகாத்மா காந்தி பெயரை நீக்கியதை கண்டித்தும், டிஜிட்டல் முறையில் வருகை பதிவேடு செய்ய வேண்டும் என்று அப்பாவி மக்களை ஏமாற்றுவதை கண்டித்தும், 100 நாள் வேலைக்கு 40 சதவீத மாநில அரசு வழங்க வேண்டும் என மாநில அரசுக்கு நிதி சுமையை ஏற்றுவதை கண்டித்தும்,
இந்த 100 நாள் வேலைக்காக பணியாற்றிய அரசு அலுவலர்கள் வேலை இழப்பை கண்டித்தும் இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.உண்ணாவிரத போராட்டத்தில் 200க்கு மேற்பட்ட ஊரக வளர்ச்சி பணியாளர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
