காரைக்கால், டிச. 31: காரைக்கால் அடுத்த மாதூர் வேளாண் அறிவியல் நிலைய முதல்வர் ராமநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: காரைக்கால் மாவட்டம் மாதூரில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் ஜனவரி 3ம்தேதி அன்று “தைப்பட்ட காய்கறி சாகுபடி தொழில் நுட்பங்கள்\” குறித்த இலவச பயிற்சி நடைபெற உள்ளது.
இப்பயிற்சியில் உயர் விளைச்சல் காய்கறி ரகங்கள், நாற்று உற்பத்தி, மகசூல் அதிகரிப்பு தொழில்நுட்பங்கள், பூச்சி நோய் மேலாண்மை நுட்பங்கள் ஆகியவை பயிற்றுவிக்கப்படும். பயிற்சியானது காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடைபெறும். பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் வேளாண் அறிவியல் நிலைய தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுநரை 9790491566 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
