ஆக்கூரில் சிறுபான்மை மக்கள் நலக்குழு ஆர்ப்பாட்டம்

செம்பனார்கோயில், டிச. 31: கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் கிறித்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கண்டித்து, செம்பனார்கோயில் அருகே ஆக்கூரில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஜான்சன் தலைமை வகித்தார்.

மக்கள் ஒற்றுமை மேடையின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிம்சன், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மாவட்ட செயலாளர் மார்க்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது, சிறுபான்மையினர் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் சமூக விரோதிகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் இஸ்லாமிய ஜமாத் நிர்வாகிகள், கிறித்தவ அமைப்பினர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

Related Stories: