ஸ்பிக்நகர், டிச. 31:பழையகாயல் சிர்கோனியம் குடியிருப்பைச் சேர்ந்தவர் மாரிச்செல்வன் (25), இவர், நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் உள்ள தனியார் சோலார் நிறுவனத்தில் பாதுகாப்பு அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். Aநேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து பைக்கில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே வரும்போது முன்னால் சென்ற லாரி எந்தவித சைகையும் காட்டாமல் திடீரென திரும்பியதால் பைக் மீது மோதியது. இவ்விபத்தில் காயமடைந்த மாரிச்செல்வன், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மதுரைக்கு கொண்டு சென்றபோது சிகிச்சை பலனின்றி இறந்தார்.
