நாகர்கோவில், டிச.31: குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: சுசீந்திரம் தாணுமாலயன்சுவாமி கோயில் மார்கழி திருவிழா தேரோட்டம் ஜனவரி 2 ம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று நடைபெறுகிறது இதனை முன்னிட்டு, தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள் 2003-ன் பிரிவு 12(2)-ன் கீழ் மாவட்ட ஆட்சியருக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தின்படி சட்டம் மற்றும் ஒழுங்கினை பராமரிக்க சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயில் அருகாமையில் அமைத்துள்ள மதுபான சில்லறை கடைகளை 2ம் தேதி அடைத்திட உத்தரவிடப்பட்டுள்ளது. சுசீந்திரம் நல்லூர், தேரூர் வெள்ளமடம், பாலகிருஷ்ணன்புதூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுசீந்திரம் பகுதியில் டாஸ்மாக் கடைகள் ஜன.2ல் மூடல்
- டாஸ்மாக்
- சுசீந்திரம்
- நாகர்கோவில்
- குமாரி மாவட்ட ஆட்சியர்
- அழகுமீனா
- சுசீந்திரம் தாணுமாலயன்சுவாமி கோவில் மார்கழி திருவிழா தேரோட்டம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
