திமுக வாக்குச்சாவடி நிர்வாகிகள் கூட்டம்

பென்னாகரம், டிச.31: தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள அஞ்சேஅள்ளி ஊராட்சி நலப்பரம்பட்டி கிராமத்தில், என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி திமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் தர்மச்செல்வன் தலைமை வகித்தார். பென்னாகரம் மத்திய ஒன்றிய திமுக பொறுப்பாளர் பச்சியப்பன் முன்னிலை வகித்து பேசினார். தொடர்ந்து வீடு, வீடாகச் சென்று திமுக அரசின் நான்காண்டு சாதனைகளை விளக்கி கூறி, துண்டு பிரசுரங்கள் விநியோகித்து ஆதரவு திரட்டினர். நிகழ்ச்சியில், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட துணை செயலாளர் உமாசங்கர், பொதுக்குழு உறுப்பினர் சோலை மணி, விவசாய அணி துணை அமைப்பாளர் சின்னசாமி, காவிரியப்பன், முனுசாமி உள்ளிட்ட நிர்வாகிகள், வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: