பாலக்கோடு, டிச. 31: காரிமங்கலம் மேற்கு ஒன்றியம், ஜக்கசமுத்திரம் ஊராட்சி, பிக்கல்நாயக்கனஅள்ளி கிராமத்தில், என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி பிரசாரம், காரிமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் கோபால் தலைமையில் நடந்தது. மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஹரிபிரசாத் வரவேற்றார். மாநில விவசாய அணி துணை செயலாளர் சூடப்பட்டி சுப்ரமணி, தொகுதி பொறுப்பாளர் அரியப்பன், மத்திய ஒன்றிய செயலாளர் முனியப்பன், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணி சக்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், ஒவ்வொரு வாக்குச்சாவடியும் வெற்றி வாக்குச்சாவடியாக மாற்றுவது குறித்தும், தமிழக அரசின் மகளிர் பல்வேறு நலத்திட்டங்களை குறித்தும் பொதுமக்களிடையே எடுத்துரைத்தனர். இந்நிகழ்ச்சியில், மீனவரணி அருள்பிரகாஷ், ஒன்றிய விவசாய அணி முனிராஜ், மகேந்திரன், ரவி, திம்மப்பன், சரவணன், ஜெகநாதன், வினோத்குமார் மற்றும் ராஜா, பழனிசாமி, சிகாமணி, குண்டன், மக்புல், பாதுஷா, மாணிக்கம், சதிஷ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பிரசாரம்
- வாக்காளர்
- வாக்குப்பதிவு நிலையம்
- வெற்றி வாக்குச்சாவடி
- பாலக்கோடு
- வாக்காளர் வாக்குச்சாவடி
- பிக்கல்நாயக்கனஅள்ளி
- ஜக்கசமுத்திரம் பஞ்சாயத்து
- கரிமங்கலம் வெஸ்ட் யூனியன்
- வழக்கறிஞர் கோபால்
- மாவட்ட இளைஞர் குழு
- துணை அமைப்பாளர்
- ஹரிபிரசாத்
