ரூ9.75 லட்சத்தில் புதிய ரேஷன் கடை

அரூர், டிச. 31: தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் மேற்கு ஒன்றியம், ஜக்குப்பட்டியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் கம்பைநல்லூர் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கி வந்தனர். பொருட்கள் வாங்குவதில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதால், மக்கள் சிரமத்திற்குள்ளாகினர். எனவே, தங்கள் பகுதிக்கு பகுதி நேர ரேஷன் கடை வேண்டும் என ஜக்குப்பட்டி கிராம மக்கள், அரூர் அதிமுக எம்எல்ஏ சம்பத்குமாரிடம் கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்ற எம்எல்ஏ, தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.9.75 லட்சம் ஒதுக்கீடு செய்து, கடந்த 4 மாதத்திற்கு முன்பு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். ரேஷன் கடை கட்டுமான பணி முடிவடைந்த நிலையில், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ரேஷன் கடையை சம்பத்குமார் எம்எல்ஏ திறந்து வைத்தார். தொடர்ந்து, பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் விநியோகத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், அதிமுக ஒன்றிய செயலாளர் மகாலிங்கம், நகர செயலாளர் தனபால், கிராம மக்கள், நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: