ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி

ஊட்டி,ஜன.22: சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி ஊட்டியில் நடந்தது. சாலை பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் ஆண்டுேதாறும் ஜனவரி மாதம் சாலை பாதுகாப்பு மாதம் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு இதற்காக பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக ஊட்டி வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் காவல்துறை சார்பில் ஊட்டியில் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக பைக் பேரணி ஊட்டியில் நடந்தது.

வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் முன்னிலை வகித்தார். ஊட்டி தாவரவியல் பூங்கா அருகே துவங்கிய பேரணியை மாவட்ட எஸ்பி., சசிமோகன் கொடியசைத்து துவக்கி வைத்தார். பைக் பேரணி சேரிங்கிராஸ் பகுதி வழியாக டிபிஒ., சந்திப்பு வரை சென்று மீண்டும் பூங்கா அருகே நிறைவடைந்தது. இதில் பெண் காவலர்கள், அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர்கள், ஊட்டி நகரில் உள்ள வாகன விற்பனையாளர்கள் என 100க்கும் மேற்பட்டோர் ஹெல்மெட் அணிந்து பங்கேற்றனர்.

Related Stories: