வீட்டுமனை பட்டா வழங்க கோரிக்கை

ராமநாதபுரம், டிச.30: நயினார்கோயில் அருகே குடியிருப்பு வீடுகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி பெண்கள் மனு அளித்தனர். நயினார்கோயில் அருகே உள்ள பெருங்களூர் கிராமத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வீட்டுமனை பட்டா கேட்டு கலெக்டரிடம் மனு கொடுத்தனர். இது குறித்து பெண்கள் கூறும்போது, பரமக்குடி தாலுகா பெருங்களூர் கிராமத்தில் 75 குடும்பங்கள் உள்ளன. விவசாய கூலி வேலை செய்து வருகிறோம்.

இங்கு கடந்த 23 ஆண்டுகளாக வீடுகளுக்கு பட்டா கிடையாது. ஆனால் பஞ்சாயத்து வரி, மின்சார கட்டணம் செலுத்தி வருகிறோம், பட்டா இல்லாததால் அரசு வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் வீடுகளை பெற முடியாமல் மண்சுவர் வீடுகளில் குடியிருந்து வருகிறோம், மழைகாலத்தில் வீடுகள் இடிந்து விடும் அபாயம் உள்ளது. மேலும் இங்கு குடிநீர், தெருச்சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் இல்லை. எனவே கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து, வீட்டுமனை பட்டா வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: