அரசுக்கு வருவாய்த்துறை கோரிக்கை 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர், ஜன.22: வளர்ச்சித் துறையில் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகள் மீ தான நெருக்கடிகளை கைவிடக் கோருவது உள்ளிட்ட 10அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி பெரம்பலூரில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாரத பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டம், ஜேஜே எம் திட்டம், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் உள்ளிட்ட ஊரக வளர்ச்சித் துறையில் செயல் படுத்தப்படும் திட்ட பணிகள் மீதான நெருக்கடிகளை, எல்லை மீறியத் தொல்லைகளைக் கைவிட வேண்டும். ஊராட்சி செயலாளர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும், ஏனைய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் அனைத்தையும் முழுமையாக வழங்க வேண்டும். முழு சுகாதார திட்ட, மாவட்ட, வட்டார ஒருங்கிணைப்பாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். அவர்களைக் குழு காப்பீட்டுத் திட்டத்தில் இணைக்க வேண்டும்.

2019ஆம் ஆண்டு ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஊரக வளர்ச்சித் து றை ஊழியர்கள் மீது பிறப்பிக்கப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கைகளை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். மாநில அளவிலான அனைத்து நிலைபதவி உயர்வு ஆணை களையும் உடனே வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக சிறுவர் பூங்கா முன்பு நேற்று மாலை ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் கவுதமன் தலைமை வகித்தார். மாவட்ட தணிக்கையாளர் சக்திவேல் வரவேற்றார். மாவட்ட இணைச் செயலாளர் தமிழரசன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் இளங்கோவன் துவக்க உரையாற்றினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் குமரிஅனந்தன், மாவட்ட துணைத் தலைவர் சிவக்குமார், சத்துணவு ஊழியர் சங்க நிர்வாகி கொளஞ்சி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்க மாவட்ட நிர்வாகி சுப்பிரமணியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.முடிவில் மாவட்ட இணைச்செயலாளர் லட்சுமி நன்றி தெரிவித்தார்.

Related Stories:

>