கோலாலம்பூர்: நடிகரும், தவெக தலைவருமான விஜய் நடிக்கும் கடைசி படமான ‘ஜன நாயகன்’ என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, நேற்று மாலை மலேசியாவிலுள்ள புக்கிட் ஜலீல் மைதானத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சியை நடத்த மலேசிய அரசு சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. அதன்படி, சினிமா தொடர்பான இந்நிகழ்ச்சியில் அரசியல் சார்ந்த குறியீடுகள், பேச்சுகள், கட்சி கொடி உள்ளிட்டவை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது.
ஆனால், நிகழ்ச்சி தொடங்கிய சில நிமிடங்களில் விஜய் ரசிகர் ஒருவர், தவெக கொடியை கொண்டு வந்து கேமரா முன்பு காட்டினார். அதை பார்த்த மலேசிய போலீசார், உடனே அந்த ரசிகரை கைது செய்தனர். பிறகு அவரை அங்கிருந்து போலீசார் அழைத்து செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.
