மாவட்டத்தில் 3 நடுநிலை பள்ளிகள் தரம் உயர்வு

நாமக்கல், ஜன.22: நாமக்கல் மாவட்டத்தில் 3 நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை, ஆலந்தூர் நாடு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, நாமக்கல் சின்னமுதலைப்பட்டி நடுநிலைப்பள்ளி, திருச்செங்கோடு நெசவாளர் காலனி நடுநிலைப்பள்ளி ஆகிய 3ம் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு பள்ளிக்கு, இரண்டு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வீதம், புதியதாக 6 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதி மக்களின் தொடர் கோரிக்கையின் அடிப்படையில், இந்த 3 பள்ளிகளும் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த 3 பள்ளிகளிலும் இந்த ஆண்டே 9ம் வகுப்பில் மாணவ, மாணவியர் சேர்த்து கொள்ளப்படுவார்கள். மேலும் 3 பள்ளிக்கும் புதிய தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

Related Stories:

>