பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு பின் நடந்த பயங்கரம்; ஓடும் காரில் மேலாளர் பலாத்காரம்: ஐடி நிறுவன சிஇஓ, தம்பதி உட்பட 3 பேர் கைது

 

உதய்பூர்: ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள ஒரு தனியார் ஐடி நிறுவனத்தில் 30 வயதுடைய பெண் ஒருவர் மேலாளராகப் பணியாற்றி வருகிறார். அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) ஜெயேஷ் என்பவரின் பிறந்தநாள் விழா கடந்த 21ம் தேதி சோபக்புரா பகுதியில் உள்ள ஓட்டலில் நடைபெற்றது. விழா முடிந்து இரவு 1.30 மணியளவில் அந்தப் பெண்ணை வீட்டிற்கு இறக்கி விடுவதாகக் கூறி, சிஇஓ ஜெயேஷ், நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி ஷில்பா மற்றும் அவரது கணவர் கவுரவ் ஆகியோர் காரில் அழைத்துச் சென்றனர். வழியில் போதைப் பொருட்களைக் கொடுத்து அந்தப் பெண்ணை மயக்கமடையச் செய்த அவர்கள், ஓடும் காரிலேயே பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டனர்.

பின்னர் அதிகாலை 5 மணியளவில் அந்தப் பெண்ணை அவரது வீட்டில் இறக்கிவிட்டுச் சென்றனர். மயக்கம் தெளிந்த பிறகு தனது உடலில் காயங்கள் இருப்பதையும், உள்ளாடைகள் மற்றும் நகை காணாமல் போயிருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், சுகர் காவல் நிலையத்தில் கடந்த 23ம் தேதி புகார் அளித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் யோகேஷ் கோயல் மற்றும் கூடுதல் எஸ்பி மாதுரி வர்மா தலைமையில் நடைபெற்ற விசாரணையில், மருத்துவப் பரிசோதனை மூலம் பாலியல் வன்கொடுமை உறுதி செய்யப்பட்டது. மேலும், காரில் இருந்த ‘டேஷ் கேமரா’வில் சம்பவம் தொடர்பான ஆடியோ மற்றும் வீடியோ பதிவாகியுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்தார்.

இந்த முக்கிய ஆதாரங்களின் அடிப்படையில், சிஇஓ ஜெயேஷ், கௌரவ் மற்றும் உடந்தையாக இருந்த ஷில்பா ஆகிய 3 பேரையும் நேற்று போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு தற்போது பெண்கள் குற்றத் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

Related Stories: